×

புதுவையில் உருவான 7 அடி பிரமாண்ட திருவள்ளுவர் சிலை: பிரான்ஸ் ஜெர்சி நகர பூங்காவில் நிறுவப்படுகிறது

புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டில் உள்ள ஜெர்சி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் பிரான்ஸ் அரசு அனுமதியுடன் தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை நிறுப்படவுள்ளது. இதற்கான சிலையை செய்வதற்கு பிரான்ஸ் தமிழ்ச்சங்கம், புதுவையில் உள்ள பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்ப கலைஞர் முனுசாமியிடம் கடந்த 7 மாதங்களுக்கு முன் ஆர்டர் கொடுத்தது. அதன்பிறகு அவர் வில்லியனூர், ஒதியம்பட்டு பகுதியில் காசிவிஸ்வநாதர் கோயில் அருகே 7 அடி உயரமுள்ள 600 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலையை 70 சதவீதம் காப்பர், 28 சதவீதம் சிங்க், 2 சதவீதம் ஈயம் ஆகியவற்றை கொண்டு வெண்கலத்தால் பிரமாண்டமாக உருவாக்கினார். பின்னர் சிலை கடந்த மார்ச் மாதம் விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள இந்திய வம்சாவளி சமூகத்தினரிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனையடுத்து பிரான்ஸ் தமிழ்ச்சங்கம் சார்பில் நிறுவப்படவுள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். இச்சிலை திறப்பு விழாவையொட்டி திருவள்ளுவர் மாநாடு நடத்தப்படவுள்ளது.

The post புதுவையில் உருவான 7 அடி பிரமாண்ட திருவள்ளுவர் சிலை: பிரான்ஸ் ஜெர்சி நகர பூங்காவில் நிறுவப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Puduvai ,French Jersey ,Puducherry ,Tamil Sangam ,French government ,Jersey City ,France ,Jersey City Park ,
× RELATED புதுவை பெண்ணிடம் ₹1.28 லட்சம் மோசடி