×

வழிகாட்டி நிகழ்ச்சி

 

தேனி, ஜூலை 14: தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பாக உள்ள லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேனி சில்வர்ஜூபிளி அரிமா சங்கம், வினோரா பவுண்டேசன் சார்பில், இந்திய ராணுவ முப்படைகளில் சேருவதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை பேபி தலைமை வகித்தார். வினோரா தொண்டு நிறுவனங்களின் இயக்குநர் டாக்டர்.ராஜன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியை பெரியகுளம் டிஎஸ்பி கீதா துவக்கி வைத்தார். இதில் ராணுவத்தில் கேப்டனாக பணிபுரியும் அன்னபூரணி கலந்து கொண்டு ராணுவத்தில் சேருவதற்கான வழிமுறைகளையும், இதற்காக மேற்கொள்ள வேண்டிய பயிற்சி முறைகள் குறித்தும் விளக்கினார். இந்நிகழ்ச்சியில், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன், அரிமா சங்க நிர்வாகிகள் பாலா, லால், ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post வழிகாட்டி நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni Silverjubili Arima ,Lekshumipuram Government High School ,Theni District Court ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு