- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஷங்கர்
- அமெரிக்க ஓப்பன் பேட்மிண்டன்
- சிந்து
- சென்
- சபை
- ஏமாற்றுதல்
- கவுன்சில் பிளஃப்ஸ், அமெரிக்கா
- இந்தியா
- தின மலர்
கவுன்சில் புளூஃப்ஸ்: அமெரிக்காவின் கவுன்சில் புளூஃப்ஸ் நகரில் யுஎஸ் ஓபன் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் சங்கர் முத்துசாமி தகுதிச் சுற்றில் 2 ஆட்டங்களில் வென்று முதன்மை சுற்றுக்கு முன்னேறினார். அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சங்கர் , அயர்லாந்து வீரர் நாட் குயென் உடன் மோதினார். அதில் சங்கர் 44நிமிடங்களில் 21-11, 21-16 என நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில இந்தியாவின் லக்ஷயா சென் வெறும் 29 நிமிடங்களில் 21-8, 21-16 என நேர் செட்களில் பின்லாந்தின் கல்லே கோல்ஜொனெனை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 27 நிமிடங்களிலேயே 21-15, 21-10 என நேர் செட்களில் அமெரிக்காவின் திஷா குப்தாவை சாய்த்து 2வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார். அதே நேரத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத், வீராங்கனை ருத்வீகா ஷிவானி ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறினர்.
The post யுஎஸ் ஓபன் பேட்மின்டன் 2வது சுற்றில் தமிழ்நாடு வீரர் சங்கர்: சிந்து, சென் முன்னேற்றம் appeared first on Dinakaran.
