×

ஈரோட்டில் நாளை தமாகா பொதுக்கூட்டம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோட்டில் நாளை தமாகா பொதுக்கூட்டம் நடைபெறுவதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கை: தமாகா சார்பில் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் காமராஜரின் 121வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் ஜூலை 15ம் தேதி(நாளை) மாலை 4 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள தமாகாவினர் கலந்து கொள்கிறார்கள்.

The post ஈரோட்டில் நாளை தமாகா பொதுக்கூட்டம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamaka ,Erode ,GK Vasan ,CHENNAI ,Kamaraj ,Tamaga ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...