×

மாருதி சுசூகி இன்விக்டோ

மாருதி சுசூகி நிறுவனம் இன்விக்டோ எம்பிவி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், டொயோட்டா இன்னோவா ஹைகிராசை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மாருதி நிறுவனம் சந்தைப்படுத்தும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மட்டுமே கொண்ட முதலாவது கார் இதுவாகும். இது ஜெட்டா பிளஸ் மற்றும் ஆல்பா பிளஸ் என 2 வேரியண்ட்களில் கிடைக்கும். துவக்க ஷோரூம் விலையாக ஜெட்டா பிளஸ் 7 சீட் கொண்டது சுமார் ரூ.24.79 லட்சம் எனவும், 8 சீட் கொண்டது சுமார் ரூ.24.84 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டாப் வேரியண்ட்டாக, ஆல்பா பிளஸ் 7 சீட் கொண்டது சுமார் ரூ.28.42 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் விட்டாரா, ஹைரைடர் போலவே இந்த கார் டொயோட்டாவின் பிவண்டி ஆலையில் தயாரிக்கப்படுகிறது. டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி மாருதி நெக்சா மூலம் சந்தைப்படுத்தப்படும் 8வது கார் இது. இந்தக் காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜினுடன் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் ஹைபிரிட் காராக இது உருவாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருடன் சேர்ந்து அதிகபட்சமாக 6,600 ஆர்பிஎம்-ல் 186 பிஎஸ் பவரையும், 5,200 ஆர்பிஎம்-ல் 206 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

100 கி.மீ வேகத்தை 9.5 நொடிகளில் எட்டும். ஒரு லிட்டருக்கு 23.42 கி.மீ மைலேஜ் வழங்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தக் காரில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூப், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாருதி சுசூகியின் விலை உயர்ந்த காராக இது இருந்தபோதும், அடாஸ் தொழில்நுட்பம் இதில் இடம்பெறவில்லை. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கெனவே துவங்கி விட்டது. ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

The post மாருதி சுசூகி இன்விக்டோ appeared first on Dinakaran.

Tags : Maruti Suzuki ,Toyota ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...