×

அமுதம் அங்காடிகளில் நாளை முதல் துவரம் பருப்பு விற்பனை: விலை உயர்வை கட்டுப்படுத்த உணவுத்துறை நடவடிக்கை..!

சென்னை: நாளை முதல் சென்னையில் 14 அமுதம் அங்காடிகள், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் தக்காளி விலை ரூ.70க்கு மேல் ரூ.200 வரை மாநிலத்துக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் நினைத்தாலும் தக்காளி விலையை குறைக்க முடியவில்லை. தமிழகத்திலும் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை கட்டுப்படுத்த அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் நாளை முதல் சென்னையில் 14 அமுதம் அங்காடிகள், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி விற்பனை செய்யப்படும் என உணவுத்துறை அறிவித்துள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி, கொள்முதல் விலைக்கு விற்பனை செய்யப்படும். பொதுமக்களின் நலன் கருதி உணவுத்துறை சார்பில் கொள்முதல் விலைக்கு நாளை முதல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. துவரம் பருப்பு அரை கிலோ ரூ.75-க்கும், உளுந்தம் பருப்பு அரை கிலோ-ரூ.60-க்கும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

The post அமுதம் அங்காடிகளில் நாளை முதல் துவரம் பருப்பு விற்பனை: விலை உயர்வை கட்டுப்படுத்த உணவுத்துறை நடவடிக்கை..! appeared first on Dinakaran.

Tags : Amutham ,Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்