×

ஆறுகளாக மாறிய சாலைகள்.. கரைபுரண்டோடும் யமுனை.. டெல்லி நகருக்குள் பாய்ந்தது : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடும் தப்பவில்லை!

டெல்லி : 45 ஆண்டுகளுக்கு பின் யமுனை நதியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தால் தலைநகர் டெல்லியில் குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது.டெல்லி செங்கோட்டையை சுற்றியுள்ள சாலைகளில் கழுத்தளவு வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.யமுனை நதியில் அபாயக்கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல சாலைகளில் தண்ணீர் புகுந்தது.வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் கூரை மீது ஏறி அமர்ந்துள்ளனர்.டெல்லி சாலைகள் ஆறுகளாக காட்சி அளிக்கின்றன.பல சாலைகளில் கார்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் பாய்வதால் வாகனத்தால் செல்பவர்கள் தவித்து வருகின்றனர்.

ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு உள்ள பகுதியும் யமுனை வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.டெல்லி சட்டசபையை நோக்கியும் யமுனை நதி வெள்ள நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையே முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள செய்தியில், “மாலை 4 மணிக்கு யமுனையில் வெப்பம் உச்சம் தொடும் என்று ஒன்றிய நதிநீர் ஆணையம் எச்சரித்துள்ளது. டெல்லி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன,”என்றார்.மேலும் யமுனையில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தேவைப்பட்டால் பள்ளிகளை நிவாரண முகாம்களாக மாற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.

The post ஆறுகளாக மாறிய சாலைகள்.. கரைபுரண்டோடும் யமுனை.. டெல்லி நகருக்குள் பாய்ந்தது : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடும் தப்பவில்லை! appeared first on Dinakaran.

Tags : Yamuna ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Yamuna River ,
× RELATED பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்;...