×

கட்டண உயர்வு பெறுவது தொடர்பாக பொதுக்குழுவை கூட்ட பவர்டேபிள் சங்கம் முடிவு

 

திருப்பூர், ஜூலை 13: திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்களுக்கு, பவர்டேபிள் சங்க உறுப்பினர்கள், ‘ஜாப் ஒர்க்’ முறையில் ஆடைகளை தைத்து கொடுக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பேச்சுவார்த்தையின் மூலமாக, கட்டண உயர்வு முடிவு செய்யப்படும். அதன்படி 2022ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி, நான்கு ஆண்டுகளுக்கான கட்டண உயர்வு ஒப்பந்தம் நிறைவேறியது. முதல் ஆண்டு 14 சதவீதம் கட்டண உயர்வு வழங்குவது என்றும், அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறை கட்டணத்தில் இருந்து தலா 7 சதவீதம் உயர்த்தி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

ஒப்பந்தப்படி, கடந்த ஜூன் மாதம் 4ம் தேதியுடன் முதல் ஆண்டு கட்டண உயர்வு முடிந்து, நடைமுறை கட்டணத்தில் 7 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த மாதம், திருப்பூர் பவர் டேபிள் சங்கம் சார்பில், இரண்டாம் ஆண்டுக்கான கட்டண உயர்வை வழங்க வேண்டுமென, சைமா சங்கத்துக்கு நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது.  அதன் பின்னரும் பெரும்பாலான நிறுவனங்கள் 7 சதவீத கட்டண உயர்வை வழங்காததால் உற்பத்தி நிறுத்தம் நடந்தது.

பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணலாம் என்றும், உற்பத்தியை வழக்கம்போல் தொடர வேண்டும் என்றும், சைமா சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதயைடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. இந்நிலையில் பவர்டேபிள் சங்க செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் வருகிற 19ம் தேதி பொதுக்குழுவைக் கூட்டி விவாதித்து முடிவு செய்வதற்கான தீர்மானிக்கப்பட்டது.

The post கட்டண உயர்வு பெறுவது தொடர்பாக பொதுக்குழுவை கூட்ட பவர்டேபிள் சங்கம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Powertable Association ,Tirupur ,Powertable Sangh ,
× RELATED மாநகராட்சிக்கு வரி செலுத்தாத பிரபல ஓட்டல் கட்டிடத்திற்கு சீல்