×

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தின விழா

 

பாடாலூர், ஜூலை 13: ஒவ்வொரு ஆண்டும் குடும்ப நலத்துறை சார்பில் ஜூலை மாதம் 11ம் தேதி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்தும், துணிப்பை வழங்கியும் மருத்துவர் முத்துசாமி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, நிலம், நீர் காற்று மாசுபடாமல் இருக்க வேண்டும். அதிகமான மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நிகழ்வில் மருந்தாளுநர், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தின விழா appeared first on Dinakaran.

Tags : World Population Day ,Government Initial Health Station ,Badalur ,Family Welfare Department ,World Population Day Festival ,Dinakaran ,
× RELATED ஓடும் பஸ்சில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை