×

ஓடும் பஸ்சில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

பாடாலூர்: செல்போனில் பேசியபடி ஓடும் பஸ்சில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வினோத்குமார்(22). பூக்கடையில் வேலைபார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரில் இருந்து துறையூர் செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது பஸ் படிக்கட்டில் நின்று செல்போனில் பேசியபடி வந்த வினோத்குமார், ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி என்ற இடத்தில் வந்த போது, திடீரென பஸ்சில் இருந்து குதித்தார். இதனை பார்த்த டிரைவர் பஸ்சை உடனே நிறுத்தினார். டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் கீழே இறங்கி பார்த்த போது, வினோத்குமார் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து பாடாலூர் போலீசார் வந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வினோத்குமார் செல்போனில் யாரிடம் பேசிக்கொண்டு வந்தார், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* மாற்றுத்திறனாளி மகனுடன் ரயிலில் பாய்ந்து தாய் தற்கொலை
திருப்பூர் வஞ்சிப்பாளையம் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் காலை 33 வயது மதிக்கத்தக்க பெண், 15 வயதுடைய சிறுவன் ஆகியோர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர். இது குறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்தது திருப்பூர் சிறுபூலுவப்பட்டி சாய் முகாம்பிகை கார்டனை சேர்ந்த விஜயராஜ் மனைவி தேவியும் (33), அவரது வாய் பேச முடியாத காதுகேளாத மாற்றத்திறனாளி மகன் அபூர்வ பிரகாஷ் (15) என்பதும் தெரிய வந்தது. விஜயராஜ் மற்றும் தேவி ஆகியோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தனர். இதனால் விரக்தி அடைந்த தேவி, நேற்று முன்தினம் மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

The post ஓடும் பஸ்சில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Balakrishnan ,Vinod Kumar ,Thariyaur ,Trichy district ,Perambalur ,Satharyur ,
× RELATED கூலி தொழிலாளி தற்கொலை