×

கல்லக்குடி சுங்கச்சாவடி பகுதியில் 500 மரக்கன்றுகள் நடும் பணிகள் நெடுஞ்சாலைதுறை அதிகாரி தொடங்கி வைத்தார்

 

லால்குடி ஜூலை 13: லால்குடி அருகே கல்லக்குடி சுங்கச்சாவடி பகுதியில் 500 மரக்கன்றுகள் நடும் பணி . தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி மகரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். குமுளூர் தமிழ்நாடு வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளின் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்றனர். இந்தியா சுதந்திரமடைந்து 75வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக எஸ்ஐபிஎல் நிறுவனம் சார்பாக திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் என்எச்.81. கல்லக்குடி சுங்கச்சாவடி அருகில் 500 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது.

விழுப்புரம் கோட்ட தேசிய நெடுஞ்சாலைதுறை திட்ட இயக்குனர் வரதராஜன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். முன்னதாக எஸ்ஐபிஎல் திட்ட தலைவர் பெரியதுரை வரவேற்றார். விழாவில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தை சேர்ந்த குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர் மணி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். விழாவின் தொடக்கமாக அனைவரும் மரக்கன்றுகளின் அவசியம் தொடர்பாக உறுதிமொழி ஏற்றனர். மேலும் இவ்விழாவில் குழு உறுப்பினர்கள் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கல்லக்குடி சுங்கச்சாவடி பகுதியில் 500 மரக்கன்றுகள் நடும் பணிகள் நெடுஞ்சாலைதுறை அதிகாரி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Highway Department ,Kallakudy Toll Road ,Lalgudi ,Kallakudi ,Kallakudy ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே சாலை சீரமைப்பு பணியின் தரம் ஆய்வு