×

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய தீபா மனு தள்ளுப்படி

கர்நாடக: ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய தீபா மனு தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது. தீபா, தீபக் ஆகியோர் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கக்கோரிய தீபா, உடைய மனுவானது தள்ளுபடி செய்யபப்ட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வாரிசுகளுக்கு வழங்க இயலாது என லஞ்ச ஒழிப்புத்துறை வாதங்களை முன்வைத்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி எச்.ஏ.மோகன், சொத்துகளுக்கு வாரிசுகள் உரிமை கோர முடியாது என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரி ஜெ தீபா தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா , சுதாகரன், இளவரசி ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட கோரி ஆர் டி ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்ததை அடுத்து , அவர்களது சொத்துக்களை ஏலம் விடும் பணி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மூலமாக மேற்கொள்ளப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ தங்க வெள்ளி வைர நகைகள் பெங்களூருவில் உள்ள அரசு கருவூலத்தில் இருப்பதாகவும், மீதி சொத்துக்கள் சென்னையில் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரி அவரது அண்ணன் மகள் ஜெ தீபா தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாரிசு வகையில் உரிமை கோரியுள்ளதாக தீபா தரப்பு வழக்கறிஞர் சத்யகுமார் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் மூன்றாம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது, தீபா, தீபக் ஆகியோர் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கக்கோரிய தீபா, உடைய மனுவானது தள்ளுபடி செய்யபப்ட்டுள்ளது.

The post ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய தீபா மனு தள்ளுப்படி appeared first on Dinakaran.

Tags : Deepa ,Jayalalithah ,Karnataka ,Dhipa ,deepak ,Jayalalitha ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...