×

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர்

கர்நாடகா, பெங்களூரிலுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புராஜெக்ட் இன்ஜினியர் பணிக்கு பி.இ., மற்றும் பி.டெக்., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Engineer- I. மொத்த இடங்கள்: 9 (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1).
வயது: 01.06.2023 தேதியின்படி 32க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.40 ஆயிரம் (முதல் வருடம்), ₹45 ஆயிரம் (2ம் வருடம்), ₹50 ஆயிரம் (3ம் வருடம்).

தகுதி: Electronics/Electronics & Communication/Electronics & Telecommunication/Electrical & Electronics/Computer Science/Information Technology/Information Science ஆகிய ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் பி.இ.,/பிடெக் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.400/-. இதை ஸ்டேட் வங்கி ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.bel-india.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2023.

The post பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர் appeared first on Dinakaran.

Tags : Bharat Electronics ,B.E. ,B.Tech ,Bangalore, Karnataka ,Dinakaran ,
× RELATED மனைவியை கழுத்தை அறுத்து கொன்று கணவன் தற்கொலை