×

விழுப்புரத்தில் பரபரப்பு இழப்பீட்டு தொகை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனம் ஜப்தி

 

விழுப்புரம், ஜூலை 11: விழுப்புரத்தில் இழப்பீட்டு தொகை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீதிமன்ற ஊழியர்கள் பொருட்களை ஜப்தி செய்து கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அருகே அற்பிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (50). கடந்த 2015, ஜூன் 10ம் தேதி இருசக்கர வாகனத்தில் நண்பர் ஒருவருடன் பின்பக்கம் அமர்ந்து பயணித்தார். அப்போது வளவனூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் சென்று நாய் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முருகன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து இதுகுறித்து வளவனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்துக்கு இன்சூரன்ஸ் செய்த நிறுவனத்திடம் மருத்துவ செலவுக்கு இழப்பீடு வழங்க கோரி வழக்கறிஞர் வேலவன் மூலம் விழுப்புரம் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த அப்போதைய நீதிபதி எழிலரசி, கடந்த 2017ம் ஆண்டு இன்சூரன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட முருகனுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.87,141 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த பணத்தை வழங்காததால் மீண்டும் கட்டளை நிறைவேற்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் வட்டியுடன் சேர்த்து ரூ.1.48 லட்சம் பணத்தை வழங்கவும், இல்லையென்றால் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து இழப்பீடு தொகை வழங்காததால் நேற்றைய தினம் விழுப்புரம் கே.கே. ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீதிமன்ற ஊழியர் பாக்கியராஜ் மற்றும் வழக்கறிஞர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்த 2 கம்ப்யூட்டர், ஒரு பிரிண்டரை ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post விழுப்புரத்தில் பரபரப்பு இழப்பீட்டு தொகை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனம் ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Jafti ,Vilupam ,Vilappuram ,Umbalam ,
× RELATED தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13...