×

ராகுல் காந்தி தான் வெறுப்பை பரப்பும் சந்தையை நடத்துகிறார்: பாஜ தலைவர் நட்டா கடும் தாக்கு

கோத்ரா: ‘’ராகுல் காந்தி தான் வெறுப்பை பரப்பும் சந்தையை நடத்தி வருகிறார்,’’ என்று பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விமர்சித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் ‘வெறுப்பை பரப்பும் சந்தையை மூடி விட்டு, அன்பிற்கான கடையை திறங்கள்’ என்று ராகுல் காந்தி பாஜ.வை சாடியிருந்தார். இந்நிலையில், மோடி ஆட்சியின் 9 ஆண்டு நிறைவையொட்டி குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பாஜ தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர்,’’எப்போதெல்லாம் மோடி சர்வதேச அரங்கில் பாராட்டப்படுகிறாரோ அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் வருத்தம் அடைந்து கோபப்படுகிறார்கள். அவர்கள் மோடியை எதிர்க்க முயற்சிக்கும் போதெல்லாம் நாட்டை எதிர்க்க தொடங்குகிறார்கள். ராகுல் காந்தி ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக கூறுவதற்காகவே இங்கிலாந்து சென்றார். அவரது பாட்டி பிரதமராக இருந்த போது 1975ம் ஆண்டில் தான் நாட்டில் அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டு, 1.5 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் தற்போது அவர் ஜனநாயத்தை பற்றி பேசுகிறார்,’’ என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், ‘’பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காங்கிரசார் தான், பாம்பு, டீக்கடைக்காரர் என்று தரம் தாழ்ந்த வார்த்தைகளை பேசுகின்றனர். மோடி பற்றி தொடர்ந்து வெறுப்பை பரப்பும் ராகுல் காந்தி அன்பிற்கான கடையை அல்ல, வெறுப்பு சந்தையை நடத்துகிறார்,’’ என்று தெரிவித்தார்.

The post ராகுல் காந்தி தான் வெறுப்பை பரப்பும் சந்தையை நடத்துகிறார்: பாஜ தலைவர் நட்டா கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,BJP ,Natta ,Godhra ,National President ,JP. Natta… ,Dinakaran ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...