×

அதிமுக ஆட்சியில் நீதிமன்ற அவமதிப்பு உதயச்சந்திரன் ஐஏஎஸ் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை: அதிமுக ஆட்சியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஆஜராக வேண்டுமென ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ரூபி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனுவில், ‘‘கன்னியாகுமாரி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியில் ஏற்பட்ட காலியிடத்தில் உதவி ஆசிரியராக கடந்த 2012ல் பணியில் சேர்ந்தேன். பணி நிரந்தரம் மற்றும் பணப்பலன்கள் கோரிய வழக்கில், ஒப்புதல் அளித்து உரிய அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டுமென 2016ல் (அதிமுக ஆட்சியில்) ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதுவரை அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை மீண்டும் விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், ‘‘2016ல் உத்தரவிட்டும் இதுவரை அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. மேல்முறையீடு குறித்த எந்த விபரமும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் (தற்போதைய நிதித்துறை முதன்மை செயலர்), அப்போதைய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன், முதன்மை கல்வி அலுவலர் பாலா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் லட்சுமணசாமி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஆக. 3க்கு தள்ளி வைத்தார்.

The post அதிமுக ஆட்சியில் நீதிமன்ற அவமதிப்பு உதயச்சந்திரன் ஐஏஎஸ் நேரில் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Udayachandran IAS ,Madurai ,ICourt ,Udayachandran ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED கோயில் நகைகள் மாயம்.. இத்தனை...