×

வரத்து குறைவு காரணமாக கோயம்பேட்டில் தக்காளி விலை கிடுகிடு

சென்னை: வரத்து குறைவு காரணமாக, கோயம்பேட்டில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் 30 வாகனங்களில் 490 டன் தக்காளி வந்தது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், வரத்து குறைவு காரணமாக நேற்று காலை மார்க்கெட்டுக்கு 28 வாகனங்களில் 370 டன் தக்காளி வந்தது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.160க்கும், சின்னவெங்காயம் ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெண்கள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் நாளுக்குநாள் தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி ரூ.110, ரூ.120 வரை விற்பனை செய்துவந்த நிலையில், நேற்று காலை திடீரென்று ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்து. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்’’ என்றனர்.

The post வரத்து குறைவு காரணமாக கோயம்பேட்டில் தக்காளி விலை கிடுகிடு appeared first on Dinakaran.

Tags : Coimpet ,Chennai ,Coimbade Market ,
× RELATED பாவூர்சத்திரத்தில் பிறந்தநாள்...