×

அரசு ஐடிஐகளில் மாணவர் சேர்க்கை

 

கிருஷ்ணகிரி, ஜூலை 10: ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசு ஐடிஐ.க்களில் அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து உரிய கட்டணம் செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்ய வருகிற 12ம் தேதி கடைசி நாளாகும். இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசினர் ஐடிஐகளில், 2023-24ம் கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஒதுக்கீட்டு இருக்கைகளின் சேர்க்கைக்கான தற்காலிக ஆணை, கடந்த 4ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஐடிஐகளில் சேர்க்கைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், தனது தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை மேற்குறிப்பிட்ட இணைய தளத்திற்குள் சென்று லாக் இன் செய்து அறிந்து கொள்ளலாம். தங்களுக்கு ஒதுக்கீட்டு செய்யப்பட்ட மேற்காணும் ஐடிஐகளில் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன், வருகிற 12ம் தேதிக்குள் நேரில் வந்து உரிய கட்டணம் செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சி காலத்தின் போது, மாதந்தோறும் ₹750 உதவித்தொகை, விலையில்லா பாடப்புத்தகம், வரைபட கருவிகள், லேப்டாப், சீருடை, சைக்கிள், பஸ் பயண அட்டை, ஷூ ஆகியவை வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாதம் ₹1000 கூடுதலாக உதவித்தொகை கிடைக்கும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண் பயிற்சியாளர்களுக்கு அருகில் உள்ள கலை அறிவியல் கல்லூரி விடுதியில் தங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும். எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசு ஐடிஐகளில் சேர்ந்து பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு துணை இயக்குநர், முதல்வர், அரசினர் ஐடிஐ, ஓசூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post அரசு ஐடிஐகளில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Govt ITIs ,Krishnagiri ,Govt. ITIs ,Hosur ,Dhenkanikottai ,. ITIs ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்