×

விருதுநகர் அருகே காவலாளியின் சடலம் காயங்களுடன் மீட்பு

விருதுநகர், ஜூலை 9: விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி (31) இவரது கணவர் ராஜ்மோகன் (42) இவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. குழந்தைகள் இல்லாத நிலையில், ராஜ்மோகன் கடந்த 4 மாதங்களாக தினசரி அதிகம் மது குடித்து வந்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து, ராஜ்மோகன் ஜி.என்.பட்டியில் உள்ள தனது அக்கா தனலட்சுமியின் வீட்டில் தங்கி கட்டனார்பட்டியில் உள்ள கிரசரில் வாட்ச்மேன் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஹோட்டலுக்கு செல்வதாக கூறி சென்ற ராஜ்மோகன் வீட்டிற்கு வராமல் மத்திய சேனை அருகில் உள்ள காலியிடத்தில் உடலில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இறந்து கிடந்த இடத்தில் காலி மதுபாட்டில், வண்டி கிடந்துள்ளது. இதுகுறித்து மனைவி மகேஸ்வரி ஆமத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதில் கணவரின் மரணத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விருதுநகர் அருகே காவலாளியின் சடலம் காயங்களுடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Maheshwari ,O. Kovilpatti ,Rajmohan ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...