×

கோயம்பேட்டில் எகிறியது பூக்களின் விலை: 1 கிலோ கனகாம்பரம் ரூ.600, மல்லி ரூ.500க்கு விற்பனை

சென்னை: மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக, கோயம்பேட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஒசூர், திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் 21ம்தேதி ஒரு கிலோ மல்லி, கனகாம்பரம் ரூ.200க்கும், ஐஸ் மல்லி, முல்லை, ஜாதிமல்லி ரூ.150க்கும், சம்பங்கி ரூ.30க்கும், பன்னீர்ரோஸ் ரூ.20க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.40க்கும், அரளி பூ ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் மழை மற்றும் வறட்சி என்று மாறி மாறி நிலவும் கால சூழல் காரணமாக, கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.500க்கும், ஐஸ் மல்லி, முல்லை, ஜாதிமல்லி ரூ.400க்கும், கனகாம்பரம் ரூ.600க்கும், அரளி ரூ.200க்கும், சாமந்தி ரூ.240க்கும், சம்பங்கி பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘ஒசூர் மற்றும் பிற மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் பூக்களின் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதன்காரணமாக, பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது ’’ என்றார்.

The post கோயம்பேட்டில் எகிறியது பூக்களின் விலை: 1 கிலோ கனகாம்பரம் ரூ.600, மல்லி ரூ.500க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Coimpet ,Chennai ,Coimbade Flower Market ,Osur ,Thindukal ,
× RELATED பாவூர்சத்திரத்தில் பிறந்தநாள்...