×

மகளிர் அனைவருக்கும் ரூ.1000 ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக – சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. தற்பொழுது ஆலோசனை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் பாகுபாடு, பாரபட்சம், கோட்பாடு என வகுத்து வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையை இழக்க வைத்திருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக தனது நிலையை, ஆலோசனை செய்ததை மாற்றிக்கொண்டு தேர்தலில் வெளியிட்ட வாக்குறுதிக்கு ஏற்ப மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். அரசு மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வகையில் அனைவருக்கும் கொடுப்பதுதான் நியாயமானது.

The post மகளிர் அனைவருக்கும் ரூ.1000 ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,CHENNAI ,Tamaka ,President ,DMK ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...