×

கனடா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு சிந்து தகுதி

கேல்கேரி: கனடா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கேல்கேரி நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, கால்இறுதியில், சீனாவின் காவ் ஃபாங்ஜியுடன் மோதினார். இதில் 21-13, 21-7 என்ற செட் கணக்கில் சிந்துவெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

அரையிறுதியில் அவர் ஜப்பானின் அகானே யமாகுச்சியுடன் மோதுகிறார். ஆடவர் ஒற்றையரில் இந்தியாவின் லக்ஷயா சென், கால்இறுதியில், பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்கியை 21-8, 17-21, 21-10 என வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

The post கனடா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு சிந்து தகுதி appeared first on Dinakaran.

Tags : Canada Open Badminton ,Sindhu ,Calgary ,Canada Open International Badminton Tournament ,India ,Dinakaran ,
× RELATED மலேசிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து