×

காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட கால்கோல் விழா

 

ஈரோடு, ஜூலை 8: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வருகின்ற 15ம் தேதி காமராஜ் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற உள்ளது. இதற்கு தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்குகிறார். இந்நிலையில், பொதுக்கூட்டத்திற்கான கால்கோல் விழா ஈரோடு அடுத்துள்ள திண்டலில் நேற்று நடைபெற்றது. விழாவில் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநிலச்செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் பொதுக்கூட்டத்திற்கான கால் கோல் விழாவில் கலந்துகொண்டு பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

The post காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட கால்கோல் விழா appeared first on Dinakaran.

Tags : Kamaraj ,Public Gathering Kalkol Festival ,Erode ,Tamil State Congress Party ,
× RELATED காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா