×

கோவை அரசு கலைக்கல்லூரியில் அனைத்து இடங்களும் நிரம்பின

 

கோவை, ஜூலை 8: கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்பில் பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பிகாம். பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம் உள்பட மொத்தம் 23 துறைகள் உள்ளன. தவிர, முதுகலை படிப்புகளும் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இளங்கலையில் உள்ள 23 பட்டப்படிப்பில் மொத்தம் 1,433 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, இரண்டு கட்டமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தியது.

அதன்படி, கோவை அரசு கலைக்கல்லூரியில் மொத்த இடங்கள் 1,626 ஆக அதிகரித்தது. இதில், கலந்தாய்வு மூலம் 1,494 இடங்கள் நிரப்பப்பட்டது. 132 இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை வராண்டா கவுன்சலிங் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, வராண்டா கவுன்சலிங் கடந்த 4-ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. இந்த கவுன்சலிங்கில் மூலமாக கல்லூரியில் நடப்பாண்டில் இருந்த 1,626 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. இதையடுத்து, வரும் 10-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post கோவை அரசு கலைக்கல்லூரியில் அனைத்து இடங்களும் நிரம்பின appeared first on Dinakaran.

Tags : Govt Arts College ,Coimbatore ,Government Arts College ,BSC… ,Coimbatore Arts College ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்