×

வேலாயுதம்பாளையம் அருகே தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சி

வேலாயுதம் பாளையம்: கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்புத்துறை சார்பில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. ஒத்திகை பயிற்சியில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு, வடகிழக்கு பருவமழை துவங்குவதை முன்னிட்டு, காவிரி ஆற்றில் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாமல் வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களை எப்படி காப்பாற்றுவது, காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் எப்படி மீட்பது, வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டால் அவர்களை எப்படி காப்பாற்றுவது, மரம் விழுந்தால் எப்படி தப்பிப்பது, இடி தாக்கினால் எப்படி காப்பாற்றிக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்வுகள் குறித்த ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் போட்டை நடு ஆற்றில் நங்கூரம் போட்டு நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றுவது போன்ற ஒத்திகைகளையும், வாழை மரங்கள், தென்னை மட்டைகள், வாட்டர் பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், ரப்பர் குடம், பிளாஸ்டிக் பேரல், லைப் ஜாக்கெட், கயிறு போன்றவற்றின் மூலம் காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்

The post வேலாயுதம்பாளையம் அருகே தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Velayuthampalayam ,Karur District Pugaluru Fire Department ,Cauvery river ,Thautupalayam ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற முதியவர் கைது