![]()
விழுப்புரம்: செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே ரவுடி லோகேஷ் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் திண்டிவனம் நீதிமன்றத்தில் 7 பேர் ஆஜராகியுள்ளனர். செங்கல்பட்டு நீதிமன்றம் வாயில் அருகே செயல்பட்டு வந்த ஜூஸ் கடை ஒன்றில் நின்று கொண்டிருந்த நபரை, டூவிலர்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசியும், பயங்கர ஆயுதங்களால் வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பினர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்ட நபர் தாம்பரம் அருகேயுள்ள இரும்புலியூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் (28) என்பதும், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்ததும் தெரியவந்துள்ளது.
மாவட்ட எஸ்.பி., சாய் பிரணீத் நேரில் வந்து விசாரணை நடத்தினார். லோகேஷ் மீது தாம்பரம், பீர்க்கன்காரணை, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, அடிதடி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு இரும்புலியூரில் பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக லோகேஷ் உள்ளார். இந்த நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய தனசேகர், பிரவீன், லோகேஷ், அருண்குமார், ரூபிஷ், ஜான்சன் உள்ளிட்ட 7 பேர் திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிமன்ற எண் 1ல் சரணடைந்துள்ளனர்.
The post செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே ரவுடி வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் திண்டிவனம் நீதிமன்றத்தில் 7 பேர் ஆஜர்..!! appeared first on Dinakaran.
