×

உயிரோடு திரும்ப வந்தாலும் ஜெ.வுக்கு பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி விட்டுத் தரமாட்டார்: அதிமுக மாஜி நிர்வாகி தாக்கு

விழுப்புரம்: ஜெயலலிதா உயிரோடு திரும்ப வந்தாலும் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி விட்டுத்தரமாட்டார் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜெ.பேரவை நிர்வாகி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கடந்த 5ம் தேதி பாஜக நிர்வாகி திருமணத்திற்கு வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக விழுப்புரம் மாவட்ட ஜெ பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன் புகழ்ந்து பேசினார். இதையடுத்து அவரை அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.

இதனால் தமிழகத்தில் அதிமுக-பாஜ மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவில் தனக்கு வழங்கப்பட்ட விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பதவியை முரளி என்ற ரகுராமன் இன்று ராஜினாமா செய்து அதன் கடிதத்தை கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நான் அதிமுகவில் 1984ல் இருந்து பொறுப்பு வகித்து வருகிறேன். எனது இரண்டு மகன்களும் பாஜவில் பொறுப்பு வகித்து வருவதால், எனது மகனின் திருமணத்தில் தந்தையாக கலந்து கொண்டேனே தவிர வேறு ஒன்றும் இல்லை.

நான் பாஜவில் இணைய இருப்பதாக கூறுகிறார்கள். அது கடவுளுக்கு தான் தெரியும். ஜெயலலிதாவே கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்து வந்தாலும், எடப்பாடி பொதுச்செயலாளர் பதவியை அவருக்கு கொடுக்க மாட்டார். கடந்த 35 ஆண்டுகளாக அம்மா கொடுத்த பதவியை வகித்து வரும் எனக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண கட்சி நிர்வாகிகளுக்கு என்ன நிலைமை என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள். அனைத்து மாவட்டத்திலும் இதே நிலை தொடர்ந்து வருகிறது.

The post உயிரோடு திரும்ப வந்தாலும் ஜெ.வுக்கு பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி விட்டுத் தரமாட்டார்: அதிமுக மாஜி நிர்வாகி தாக்கு appeared first on Dinakaran.

Tags : J.J. ,chief secretary of state ,minister ,Viluppuram ,Jayalalithah ,general ,Aive J.J. ,general secretary of state ,maji ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...