×

டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல: தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்!

சென்னை: டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் தெரிவித்துள்ளார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டிஐஜி விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், “கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது. கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்து விஜயகுமாருக்கு ஐ.ஜி. சுதாகர் நேற்று முன்தினம் கவுன்சிலிங் அளித்துள்ளார். அவர் உயிரை மாய்த்துக் கொண்டதற்கு அலுவல் பிரச்சனை காரணம் இல்லை. இது குறித்து ஐ.ஜி. சுதாகர் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல: தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்! appeared first on Dinakaran.

Tags : DIG ,Vijayakumar ,Tamil Nadu ,DGB ,Sankar Jiwal ,Chennai ,Shankar Jiwal ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த...