×

காங்கிரஸ் கொடியேற்று விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மருங்குளம் நால்ரோடு, மருங்குளம் கிராமம், வேங்கராயன்குடிகாடு. நா.வல்லுண்டான்பட்டு, கோ.வல்லுண்டான்பட்டு, சண்முகா நகர், நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலை ஆகிய இடங்களில் காங்கிரஸ் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் கொடியேற்றினார். முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கண்டிதம்பட்டு கோவிந்தராஜ், கதர் வெங்கடேசன், மாவட்ட ஊடகப் பிரிவுத்தலைவர் பிரபு, வட்டாரத்தலைவர் ரவிச்சந்திரன், மாநகர மாவட்ட துணைத்தலைவர் செந்தில் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சோழமண்டல சிவாஜி பாசறைத்தலைவர் சதா.வெங்கட்ராமன், மந்திரி (எ) பாலசுப்ரமணியன், முன்னாள் வட்டாரத்தலைவர் கமாண்டர் செல்வராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சங்கர சூரியமூர்த்தி, சத்தியமூர்த்தி, ரமேஷ்சிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post காங்கிரஸ் கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Tags : Congressional Codiate Festival ,Thanjavur ,Murugulam Village ,Vengarayankududududam ,UN Vallundanbuttu ,Co. Vallundanbuttu ,Sanmukha Nagar ,Nanjikotta ,Congressional Flagrante Festival ,Dinakaran ,
× RELATED துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி...