×

20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது கும்பகோணத்தில் 3 கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சமத்தனார்குடி விசாலாட்சி அம்மன் சமேத காசிவிஸ்வநாதர், பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார், தர்மசாஸ்தா ஐயப்பன் ஆகிய 3 கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் சமத்தனார்குடி அண்ணா நகரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்மன் சமேத காசி விசுவநாதர், பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார், தர்மசாஸ்தா ஐயப்பன் ஆகிய ஆலயங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் கடந்த இரண்டாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 4 கால பூஜைகள் முடிந்து, 3 கோயில் கும்பத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

The post 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது கும்பகோணத்தில் 3 கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Kumbakonam ,Samathanargudi Visalakshi Amman Sametha Kashiviswanathar ,Poorna Pushkala Sametha Iyanar ,Dharmashastha Ayyappan ,Nachiargo ,
× RELATED பொய்யாமொழி விநாயகர், மலையம்மன் கோயில் கும்பாபிஷேகம்