×

மூங்கில் பட்டறையில் திடீர் தீ விபத்து

மோகனூர்: மோகனூர் காட்டுப்புத்தூர் சாலை ஒருவந்தூர் சம்பாமேடு பகுதியில், அஜித்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், வாழைத்தார் மரத்திற்கு பயன்படுத்த மூங்கில் அடுக்கி பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மூங்கில் பட்டறை அருகே, ஆலமரத்தில் தீப்பிடித்தது. பின்னர், மூங்கில் பட்டறைக்கு பரவி தீ பற்றி எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

The post மூங்கில் பட்டறையில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Mohanur Kattuputtur Road Oruvantur Sambamedu ,Ajithan ,Dinakaran ,
× RELATED மோகனூர் அருகே மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் கைது