×

மல்லசமுத்திரம் பேரூராட்சி கூட்டம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் திருமலை தலைமை தாங்கினார். பிடிஓ ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நபார்டு திட்டம் மூலம் தார்சாலை அமைத்தல், நாமக்கல் எம்.பி., நிதியில் காளிப்பட்டி கோவில் பின்புறம் எல்.இ.டி., உயர்கோபுர மின்விளக்கு அமைத்தல், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் நிதியில், ஆசிரியர் காலனி பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்தல், பெரியஉப்புபாளையம் பகுதியில், பைப்லைன் அமைத்தல், கோணங்கிபாளையம் பகுதியில் தெருவிளக்கு அமைத்தல், பேரூராட்சியின் அனைத்து பகுதிகளிலும் எல்.இ.டி., விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post மல்லசமுத்திரம் பேரூராட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram Municipal Council ,Mallasamutram ,Mallasamutram Town Panchayat ,Municipal Council ,President ,Tirumala ,Mallasamudram Municipal Council ,Dinakaran ,
× RELATED மிளகு, காபிக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டம்