×

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காததால் அரசு பேருந்துகள் ஜப்தி: நீதிமன்ற ஊழியர்கள் நடவடிக்கை

* பேருந்து நிலையத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த நெமிலி கிராமத்தை சேர்ந்தவர்கள் எல்லம்மாள் – ராமலிங்கம் தம்பதியினர். இவர்களுடைய மகன் வேல்முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 2016ம் ஆண்டு தனது ஊருக்கு செல்வதற்காக, ஆக்கூர் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, பாண்டிச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து, வேல்முருகனின் பைக்கின் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் இழப்பீடாக ரூ.24 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அரசு போக்குவரத்து கழகம் மேற்கண்ட நீதிமன்றம் குறிப்பிட்ட தொகையை கொடுக்க தவறியதால் ஏற்கனவே விதித்த ரூ.24 லட்சமும், அதற்கு வட்டியாக ரூ.3 லட்சமும் சேர்த்து, ரூ.27 லட்சம் விழுப்புரம் கோட்ட காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலம் வழங்க வேண்டும் என மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். மேலும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 2 அரசு பேருந்துகளை ஜப்தி செய்து, நீதிமன்ற ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு அரசு பேருந்துகளை எடுத்து சென்றனர். விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

The post விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காததால் அரசு பேருந்துகள் ஜப்தி: நீதிமன்ற ஊழியர்கள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Ellammal ,Ramalingam ,Nemili village ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...