டெல்லி: ஜூன் மாதத்தில் இந்தியாவில் 18.6 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி உள்ளதாக வாகன டீலர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2022 ஜூனுடன் ஒப்பிட்டால் 2023 ஜூன் மாதத்தில் வாகன விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக டீலர்கள் சங்க கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. எனினும் மே மாத வாகன விற்பனையுடன் ஒப்பிட்டால் ஜூனில் விற்பனை 8 சதவீதம் குறைந்துள்ளதாக டீலர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2022 ஜூனை விட 2023 ஜூனில் இருசக்கர வாகன விற்பனை 7 சதவீதமும், கார்கள் விற்பனை 5 சதவீதமும் அதிகரித்துள்ளன.
2023 ஜூனில் 3 சக்கர வாகன விற்பனை 75 சதவீதமும், டிராக்டர்கள் விற்பனை 41 சதவீதமும் உயர்ந்துள்ளன. லாரிகள், டிரக்குகள், சரக்கு வேன்கள் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களின் விற்பனை 0.44 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022 ஜூனில் 12.2 லட்சமாக இருந்த இருசக்கர வாகன விற்பனை 2023 ஜூனில் 13.10 லட்சமாக அதிகரித்துள்ளது. எனினும் கொரோனாவுக்கு முன்பிருந்த வாகன விற்பனையுடன் ஒப்பிட்டால் கடந்த ஜூனில் விற்பனை 3 சதவீதம் குறைவாகவே உள்ளது.
The post ஜூன் மாதத்தில் இந்தியாவில் 18.6 லட்சம் வாகனங்கள் விற்பனை: வாகன டீலர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு appeared first on Dinakaran.