×

தீர்த்தகுடம் எடுத்து செல்லும் பக்தர்கள் அதிகாரம் இல்லை என்பதால் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கஸ்டடி எடுக்க முடியாது

திருச்சி, ஜூலை 6: அமலாத் துறைக்கு அதிகாரம் இல்லை என்பதால் அமைச்சர் செந்தில்பாலாஜியை கஸ்டடி எடுக்க முடியாது என்று திருச்சியில் நேற்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். திமுக சார்பில் 58வது வார்டு கிராப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. வட்ட செயலாளர் கிராப்பட்டி செல்வம் தலைமை வகித்தார். தங்கவேல் வரவேற்றார். தி.மு.க முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: திமுக அரசை ஆளுநர் விமர்சித்து வருகிறார். காமராஜர் பிரதமராவதை தடுத்தது தி.மு.க தான் என அண்ணாமலை கூறியுள்ளார். காமராஜர் மறையும் வரை அவருக்காக அனைத்தையும் செய்து கொடுத்தது திமுக. காமராஜருக்கு சிலை வைத்த கட்சி திமுக தான் என்பதை மறந்து விடக்கூடாது, இது தற்போது உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு கூட தெரியாது. காமராஜர் இறந்தபோது அவருக்கு அரசு மரியாதை செலுத்தி மணிமண்டபமும் கட்டியவர் கலைஞர். செந்தில்பாலாஜியை கைது செய்தபோது மனித உரிமை மீறல் நடந்துள்ளது என்பதை நான் ஏற்கனவே கூறியிருந்தேன். நீதிமன்றம் நேற்று அதை உறுதி செய்துள்ளது. இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

செந்தில்பாலாஜி வழக்கில் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு கூறினாலும் அவர்கள் இருவரும் அமலாக்கத்துறைக்கு கஸ்டடி கேட்க அதிகாரம் இல்லை என்பதை கூறி உள்ளார்கள். இதன் மூலம் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கஸ்டடி எடுக்க முடியாது என்பது உறுதியாகி உள்ளது. தி.மு.க தொண்டர்கள் கட்சிக்கு ஒரு சோதனை என்றால் பார்த்து கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள் என்று பேசினார்.

அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், அண்ணாமலை அவரின் இருப்பை காட்டிக்கொள்ள தான் பேசுகிறார். அவருக்கு நாங்கள் பதில் தருவதே இல்லை. கலைஞர் திருச்சிக்கு வரும் பொழுதெல்லாம் திருச்சிக்கு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அவர் வழியில் தற்போது முதலமைச்சரும் பல திட்டங்களை திருச்சிக்கு தந்து அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க வில் திருச்சி மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. செந்தில்பாலாஜி சிறை சென்று விட்டார், அடுத்து நேரு தான் என அ.தி.மு.க வினர் கூறுகிறார்கள். நாங்கள் சிறை செல்வது குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை. அ.தி.மு.கவினரை போல் பயப்பட மாட்டோம். திமுகவிற்காக அமைச்சராகவும் இருப்பேன், சிறைக்கு செல்ல தயாராகவும் இருப்பேன். தி.மு.க வின் தொண்டர்களை யாரும் மிரட்டி பார்க்க முடியாது என்று அமைச்சர் பேசினார். இந்த கூட்டத்தில் திமுகவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தீர்த்தகுடம் எடுத்து செல்லும் பக்தர்கள் அதிகாரம் இல்லை என்பதால் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கஸ்டடி எடுக்க முடியாது appeared first on Dinakaran.

Tags : Minister of Enforcement ,senthilphalaji ,Krishkasi ,Trichy ,Minister ,Senthilbalaji ,Kustadi ,Amalat ,Enforcement ,Chenthilephalaji ,
× RELATED தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு...