×

சத்தி பஸ் நிலையம் அருகே மலர்கள் விவசாயிகள் சார்பில் புதிய பூ மார்க்கெட் திறப்பு

 

சத்தியமங்கலம், ஜூலை 6: சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே கரட்டூர் சாலையில் தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் புதிய பூ மார்க்கெட் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. புதிய பூ மார்க்கெட்டை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசிபி இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

மலர்கள் விவசாயிகள் சார்பில் துவங்கப்பட்டுள்ள இந்த பூ மார்க்கெட்டில் மல்லி, முல்லை, கனகாம்பரம், காக்கடா, செண்டுமல்லி, கோழிக்கொண்டை, ஜாதிமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களை விவசாயிகள் கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து பயன்பெறலாம் எனவும், விவசாயிகளுக்கு நியாயமான முறையில் மலர்களை விற்பனை செய்து கொடுத்து, நிலுவை இல்லாமல் பணம் பட்டுவாடா செய்யப்படும் என சங்க ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன், சிவலிங்கம் தெரிவித்தனர்.

விழாவில் அக்ரி சின்ராஜ், பண்ணாரி அம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் புருஷோத்தமன், சத்தியமங்கலம் நகராட்சி துணைத்தலைவர் நடராஜ், அரியப்பம்பாளையம் பேரூர் திமுக கழக செயலாளர் வக்கீல் செந்தில்நாதன், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், அவைத்தலைவர் ஆறுச்சாமி, குணசேகரன், பழனிச்சாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

The post சத்தி பஸ் நிலையம் அருகே மலர்கள் விவசாயிகள் சார்பில் புதிய பூ மார்க்கெட் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Satthi Bus Stand ,Sathyamangalam ,Tamil Nadu Flower Producers Farmers Association ,Karatoor Road ,Sathyamangalam Bus Stand ,Dinakaran ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை