×

மருத்துவர்கள் தின விழாவில் சிறந்த டாக்டருக்கான விருது

காரைக்குடி, ஜூலை 6: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீராஜஸ்ரீராஜன் கல்வி குழுமம் சார்பில் மருத்துவர்கள் தின விழா கொண்டாப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள் வரவேற்றார். மருத்துவர் தினத்தை முன்னிட்டு டாக்டர் திருப்பதியை பாராட்டி விருது வழங்கி முன்னாள் துணைவேந்தர், கல்விகுழும ஆலோசகர் பேராசிரியர் சுப்பையா பேசுகையில்,
மருத்துவர்கள் தங்களை அர்பணித்துக் கொண்டு சிறப்பான சேவையாற்றி வருகின்றனர். மக்களை காப்பதில் மருத்துவர்களின் சேவை மகத்தானது. கோவிட் காலத்தில் தங்களது உயிரையும் பொறுப்படுத்தாமல் மக்கள் சேவையாற்றி பல உயிர்களை காப்பாற்றியுள்ளார்கள்.

நம் கண்முன் வாழும் கடவுள்களாக மருத்துவர்கள் உள்ளார்கள்.இங்கு படிக்கும் மாணவர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவர் ஆவதே தங்களின் கனவு என தெரிவித்துள்ளனர். அவர்கள் கனவை நினைவாக்குவதே எங்களின் கடமை. இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு அதனை அடைய பயணம் செய்ய வேண்டும். மாணவர்களின் இலக்கை அடைய வழிகாட்டியாக, துணையாக இருப்பது ஆசிரியர்களின் கடமை என்றார்.நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரி முதல்வர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மருத்துவர்கள் தின விழாவில் சிறந்த டாக்டருக்கான விருது appeared first on Dinakaran.

Tags : Best Doctor ,Doctors Day ,Karaikudi ,Doctor's Day ,Amaravathiputur Srirajasreerajan Education Group ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக டவுன்...