×

ஆற்று மணல் திருடியவர் கைது

 

திருப்புவனம், ஜூலை 6: திருப்புவனம் அருகே பாப்பாங்குளம் விலக்கு பகுதியில் வைகையாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து வந்த லாரியை சிவகங்கை மாவட்ட எஸ்.பி தனிப்படை பிரிவினர் மடக்கி பிடித்தனர். லாரியில் சுமார் 2 யூனிட் ஆற்று மணல் இருந்தது. லாரியை திருப்பாச்சேத்தி அருகே தாழிக்குளத்தை சேர்ந்த டிரைவர் மாசானம் (37) ஓட்டி வந்தார். அவரையும் லாரியையும் திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆற்று மணல் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,Vaigaiya river ,Pappangulam ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் அருகே சோகம் 6 மாத...