×

வெள்ளை மாளிகையில் சிக்கிய போதைப்பொருள்: பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் கோகெய்ன் சிக்கியது பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் பைடன் வசிக்கும் வெள்ளை மாளிகை உச்சகட்ட பாதுகாப்பைக் கொண்டுள்ள கட்டிடமாகும். அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு சுமார் 8.45 மணியளவில் பவுடர் போன்ற பொருளை கண்டுபிடித்தனர். இதனால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது. இது தாக்குதலுக்கான நாச வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்த சமயத்தில் அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. முன் எச்சரிக்கையாக வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்தனர். அந்த மர்ம பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்பு துறை உறுதிப்படுத்தியது. பின்னர் அந்த பவுடர் போன்ற மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் அது கோகெய்ன் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளை மாளிகைக்குள் போதைப் பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post வெள்ளை மாளிகையில் சிக்கிய போதைப்பொருள்: பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : White House ,WASHINGTON ,US ,President Biden ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு...