×

ரூ.15க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வேண்டுமா..? ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை

ஜெய்ப்பூர்: விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனால் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய்க்கு விற்பனையாகும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி; ஆட்டோமொபைல் துறையின் லாபம் ரூ.7.55 லட்சம் கோடி, இத்துறையில் 4.5 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இந்தத் துறையானது அரசுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டியை வழங்குகிறது.

இந்தத் தொழிலை ரூ.15 லட்சம் கோடியாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இந்தத் தொழில் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்; இந்திய வாகனங்களில் சராசரியாக 60% எத்தனால், 40% மின்சாரத்தை எரிபொருளாக பயன்படுத்தினால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15க்கு கிடைக்கும். மேலும் மக்கள் பயனடைவார்கள். மாசு மற்றும் இறக்குமதி குறையும். விவசாயிகள் உணவு வழங்குபவர்களாக மட்டுமல்ல, ஆற்றல் வழங்குபவர்களாகவும் மாற வேண்டும் என்ற எண்ணத்தில் நமது அரசாங்கம் உள்ளது, இனி அனைத்து வாகனங்களும் விவசாயி உற்பத்தி செய்யும் எத்தனாலில் இயங்கும்.

இறக்குமதிக்கு செலவு செய்யப்படும் ரூ.16 லட்சம் கோடி, விவசாயிகளின் வீடுகளுக்குச் செல்லும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல் விலை ஒருவருடத்துக்கும் மேல் குறைக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.15க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வேண்டுமா..? ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nidin Kadkari ,Jaipur ,minister ,Dinakaran ,
× RELATED 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்...