×

நெய்வேலி நிலக்கரி ஆலையில் 500 அப்ரன்டிஸ் :ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு

பயிற்சிகள்:

1. Industrial Trainee (SME- Operations): 238 இடங்கள். பயிற்சி காலம்: 3 ஆண்டுகள். உதவித் தொகை: முதல் வருடம்- ரூ.18,000, 2ம் வருடம்- ரூ.20,000, 3ம் வருடம்- ரூ.22,000. வயது: பொதுப் பிரிவினர்கள் 37 வயதிற்குள்ளும், எஸ்சி/எஸ்டியினர் 42 வயதிற்குள்ளும், ஒபிசியினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு பொறியியல் பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினர் 40% பெற்றிருந்தால் போதும்.

2. Industrial Trainee (Mines & Mines Support Services): 262 இடங்கள். பயிற்சி காலம்: 3 ஆண்டுகள். உதவித் தொகை: முதல் வருடம் ரூ.14,000. 2ம் வருடம்- ரூ.16,000. மூன்றாம் வருடம்- ரூ.18,000. வயது: பொது பிரிவினர்கள் 37 வயதிற்குள்ளும், எஸ்சி/எஸ்டியினர் 42 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். தகுதி: Fitter/Turner/Electrician/Welding/MMV/ Diesel Mechanic ஆகிய ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ.
நெய்வேலி நிலக்கரி ஆலையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.07.2023.

The post நெய்வேலி நிலக்கரி ஆலையில் 500 அப்ரன்டிஸ் :ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Neyveli ,Dinakaran ,
× RELATED மகன் தூக்குபோட்டு தற்கொலை