×

நடராஜர் கோயில் கனகசபை குறித்து பொய்யான தகவல் கூறுவதா?

சிதம்பரம், ஜூலை 5: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை குறித்து உண்மைக்கு புறம்பாக கருத்து கூறிய பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என். ராதா கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் கட்டியதற்கு ஆதாரம் இல்லை. இக்கோயில் பொதுவான கோயில். நடராஜர் கோயிலை 1999 தீட்சிதர்கள் கட்டினார்கள் என்று உண்மைக்கு மாறாக வரலாறு தெரியாமல் தவறான கருத்தை பா.ஜ.க முன்னாள் செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார். இது கண்டனத்திற்குரியது. பல நூற்றாண்டு காலமாக பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்து வரும் நிலையில் இம்முறையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எச்.ராஜா போன்றவர்கள் எதிர்ப்பதை கைவிட்டு பக்தர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவை தனிப்பட்ட முறையில் எச்.ராஜா விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post நடராஜர் கோயில் கனகசபை குறித்து பொய்யான தகவல் கூறுவதா? appeared first on Dinakaran.

Tags : Natarajar Temple ,Kanakasabha ,Chidambaram ,J.J. Nationalis ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...