×

தென்கரைகோட்டை பகுதியில்ரூ.2 கோடியில் பாலம் கட்டும் பணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே தென்கரைகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில்,ரூ.2 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணியை கோவிந்தசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்கரைகோட்டை ஊராட்சி பகுதியில் உள்ள வடகரை முதல் சிங்கரான்தோப்பு ரோடு வரைரூ.2.04 கோடி மதிப்பீட்டில் புதிதாக பாலம் கட்டும் பணியை, பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், ஒன்றிய செயலாளர் மதிவாணன், ஒன்றிய குழு தலைவர் உதயா மோகனசுந்தரம், நகர செயலாளர் தென்னரசு, ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில்குமார், நிர்வாகிகள் கோவிந்தன், ரவி, தினகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தென்கரைகோட்டை பகுதியில்ரூ.2 கோடியில் பாலம் கட்டும் பணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Tenkaraikotta ,Dharmapuri ,Govindaswamy ,Thenkaraikottai Panchayat ,Paprirettipatti.… ,Thenkaraikottai ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு