×

கல்குவாரி உரிமையாளர்கள் 8 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ்!

சென்னை: கல்குவாரி உரிமையாளர்கள் 8 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கடந்த 26ம் தேதி முதல் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கல்குவாரி நடத்துவதற்கான விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறைகள் உள்ளது. குறிப்பாக பெரிய அளவிலான கல்குவாரிகளுக்கு ஒரு விதிமுறை, சிறிய அளவிலான கல்குவாரிகளுக்கு ஒரு விதிமுறை என இருந்த சூழ்நிலையில், தற்போது பெரிய அளவிலான கல்குவாரிகளுக்கு என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ, அதே விதிமுறைகள் சிறிய அளவிலான கல்குவாரிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் விதிகளில் அவ்வப்போது கனிமவளத்துறை அதிகாரிகள் மாற்றம் செய்வதாக கல்குவாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதுபோன்ற கட்டுப்பாடுகள் காரணமாக கல்குவாரி தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறி இந்த விதிமுறைகளில் தளர்வு வேண்டும் என கூறி கடந்த 26ம் தேதி முதல் கல்குவாரி உரிமையாளர்கள் தமிழ்நாடு முழுவதும் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் இன்று கல்குவாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கல்குவாரி உரிமையாளர்கள் 8 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ்! appeared first on Dinakaran.

Tags : Kalquari ,CHENNAI ,Kalquarie ,Dinakaran ,
× RELATED மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை...