×

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொழி இந்தி என அறிவிப்பு: திமுக எம்.பி வில்சன் கடும் கண்டனம்

சென்னை : இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொழி இந்தி என்று அதன் தலைவர் அறிவித்ததற்கு திமுக எம்.பி வில்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘பல தரப்பட்ட மொழிகள் கொண்ட மக்கள் வாழும் நம்தேசத்தில், இந்தி மொழியை  திணிப்பதற்கான முயற்சிகள் காலங்காலமாக அரங்கேற்றப்பட்டு வரும் அவல நிலை நிலவுகிறது. அதன் நீட்சியாக தற்போது, 2021 அக்டோபர் மாத பட்டயக் கணக்காளர் இதழில் (Chartered Accountant Journal ),இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI ) தலைவர் திரு. சி.ஏ. நிஹார்,  இந்தி மொழியை பட்டயக்கணக்காளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொழி என்று அறிவித்துள்ளதோடு, பட்டயக் கணக்காளர்கள் ( Charted Accountants )  தங்களின் அன்றாட வேலைகளிலும்,நிறுவனத்தின் அலுவல்களிலும்,  மாணவர்களுடனும்,அரசுடனும், ஒழுங்குமுறையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்துரையாடும்போதும் இந்தி மொழியை மட்டுமே பின்பற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று மத்திய கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.அதன்படி, ‘ராஜ்ய பாஷை’  என்பதால் இந்தியை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தவும் ஊக்குவிக்கவும் உறுதிமொழி எடுக்குமாறு ICAI மத்திய கவுன்சில் தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ICAI, 1949ம்ஆண்டு பட்டயக் கணக்காளர்கள் சட்டத்தால் நாட்டில் பட்டயக் கணக்கியல் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பு. இத்தகையதொரு அமைப்பில் அரங்கேற்றப்படும் இந்தி திணிப்பை ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு சீதாராமன் ராவ் அவர்கள் கண்டித்து உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன்,’ என்று தெரிவித்துள்ளார்,’ என்று தெரிவித்துள்ளார். …

The post இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொழி இந்தி என அறிவிப்பு: திமுக எம்.பி வில்சன் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Institute of Chartered Accountants of India ,Dizhagam M. B. Wilson ,Chennai ,Wilson ,
× RELATED சரியாக உழைத்தால் வெற்றி; பட்டய...