×

தொல்பொருள் தளத்தில் பழங்கால பீங்கான் தகடுகள் கண்டுபிடிப்பு: பழங்கால மாயன் சிகரத்திற்கு 500 ஆண்டுகளுக்கு முந்தியவை

அமெரிக்கா: கவுத்தமாலாவில் உள்ள ஒரு பழங்கால மாயன் குடியேற்றத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலை பொருட்கள் நாகரிகம் மற்றும் பிற கலாச்சார குழுக்களுடனான அதன் சாத்தியமான உறவுகளை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. வடக்கு கவுத்தமாலா காடுகளின் மையத்தில் மிராடோ தொல்பொருள் தளம் உள்ளது. இது கி.மு ஆயிரமாவது ஆண்டிற்கும் முந்தையதாகும்.

இப்பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வு பணியின் போது FARES அறக்கட்டளையை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பீங்கான் தகடுகளை கண்டுபிடித்துள்ளனர். இது நவீனகால மெக்சிகோவில் மேஸோ அமெரிக்க பிராந்தியத்தின் ஆரம்பகால நாகரிகங்கள் ஒன்றான ஒல்மெஸ் உடனான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது. இந்த கலை பொருட்கள் மாயன் நாகரீகத்தின் பழங்கால சிகரத்திற்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று அறியப்பட்டுள்ளன. தொல்பொருள் ஆய்வுகளில் இங்கு ஏற்கனவே 132 சதுர மீட்டர் பரப்பளவில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தொல்பொருள் தளத்தில் பழங்கால பீங்கான் தகடுகள் கண்டுபிடிப்பு: பழங்கால மாயன் சிகரத்திற்கு 500 ஆண்டுகளுக்கு முந்தியவை appeared first on Dinakaran.

Tags : Mayan ,USA ,Kuttamala ,
× RELATED 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: மாட்டு வியாபாரி கைது