×

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 11ம் தேதி விசாரணை


காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 11ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்ட பிரிவு 370 கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஒன்றிய அரசு ரத்து செய்தது.

ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 20 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் முறையாக 2019 டிசம்பரில் நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் அந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு வழக்கை மாற்றுமாறு மனுதாரர்கள் முறையிட்டனர்.

ஆனால் 2020 மார்ச்சில் வழங்கப்பட்ட உத்தரவில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலேயே வழக்கு நடைபெறும் என என்.வி ரமணா அறிவித்தார். அதன் பிறகு என்.வி ரமணா, யு.யு லலித் ஆகியோர் அடுத்தடுத்து தலைமை நீதிபதிகளாக பதவியேற்று ஓய்வும் பெற்ற நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிட படாமலேயே இருந்தது.

இந்நிலையில் மூன்று ஆண்டுகள் 4 மாதங்களுக்கு பிறகு வரும் 11ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. எஸ்.கே கவுல், பி.ஆர்.கவாய், சூரிய காந்த் ஆகியோருடன் ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த என்.ரமணா, சுபாஷ் ரெட்டி ஓய்வு பெற்ற நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட், சன்ஷிவ் கண்ணா ஆகியோர் புதிய அமர்வில் இடம்பெற்றுள்ளனர்.

The post ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 11ம் தேதி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Jammu-Kashmir ,Kashmir ,Supreme Court ,Jammu ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...