×

அத்தியூர் கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

 

பெரம்பலூர்,ஜூலை4:அத்தியூர் கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம காரியஸ்தர்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை வகித்தார்.கூட்டத்தில் குன்னம் தாலுகா அத்தியூர் கிரா மத்தைச்சேர்ந்த கிராம காரியஸ்தர் மற்றும் முக்கியப் பிரமுகர்களான தங்க வேல், மாணிக்கம், துளசி நாதன், சின்ன சிவராமன், விஸ்வநாதன், முருகன், மாயவேல், மூக்கன், ராஜே ந்திரன்உள்ளிட்டோர் திரண்டு வந்து அளித்தப் புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது :

அத்தியூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெருக்களில் தனிநபர் ஒருவர் வீதி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது போல் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் வீதியே இல்லாத சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. மகாமாரியம்மன் ஆலய திருவிழாவின் போது சுவாமி வீதி உலா வரும் போது சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதால் மிகவும் இடையூறாக உள்ளது. எனவே கிராம காரியஸ்தர்கள் 9 பேரும் ஒரு மனதாக, ஊராட்சி மன்றத் தலைவரோடு வேப்பூர் வளர்ச்சித்துறை அதிகாரியிடம் மனுக்கள் அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தி சாலை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post அத்தியூர் கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Athiyur ,Perambalur ,Adthiur ,Dinakaran ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...