×

கீழ்வேளூர் அருகே ஆழியூர் செய்யது இனாயத்துல்லாஹ் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா

 

கீழ்வேளூர் ஜூலை 4: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆழியூர் செய்யது இனாயத்துல்லாஹ் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவில் சந்தன கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவம் நேற்று அதிகாலை நடைபெற்றது நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஆழியூரிலுள்ள செய்யது இனாயத்துல்லாஹ் வலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவின் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றுடன் கடந்த ஜூன் 23ம் தேதி துவங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கியது.

ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் தர்காவை வந்தடைந்தது. விடிய விடிய நடந்த சந்தனக்கூடு ஊர்வலமானது நேற்று அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தது. தொடர்ந்து பாத்தியா துவா ஓதி சந்தனக்குடத்தில் உள்ள சந்தனத்தால், செய்யது இனாயத்துல்லாஹ் வலியுல்லாஹ்-விற்கு சந்தனம் பூசப்பட்டது. தொடர்ந்து கந்தூரி விழாவை முன்னிட்டு மத பாகுபாடுயின்றி கலந்து கொண்ட அனைத்து மதத்தினருக்கும் சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் கந்தூரி கமிட்டி தலைவர் நூருல்ஹக், ஜமாத் தலைவர் ஹாஜி சையது அகமது, ஜமாத் செயலாளர் யூசும்தீன், ஆலோசகர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post கீழ்வேளூர் அருகே ஆழியூர் செய்யது இனாயத்துல்லாஹ் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா appeared first on Dinakaran.

Tags : Inayatullah Waliullah Targah Ganduri festival ,Aliyur ,Kilvellur ,Killyvellur ,Nagapattinam ,Inayatullah Waliullah Dargah Ganduri festival ,Inayatullah Valiullah Dargah Kanduri festival ,Kilivellur ,Dinakaran ,
× RELATED நடுக்கடலில் 2 மீனவர்கள் கொலை: நாகையில்...