×

நடுக்கடலில் மீன் பிடித்த கலெக்டர்

நாகை: நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக இருப்பவர் ஜானிடாம் வர்கீஸ். இவர் சமீபத்தில் விவசாயிகளுடன் வயலில் இறங்கி விதை விதைத்தார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுடன் வயலில் கம்பு அறுவடை செய்தார். இந்நிலையில், இவர் விசைப்படகில் மீனவர்களுடன் நடுக்கடலில் சென்று மீன்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விசைப்படகில் மீனவர்களுடன் நடுக்கடலுன் சென்று மீனவர்களின் பாரம்பரிய வழக்கப்படி சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு மீன் பிடி வலையை மீனவர்களுடன் கடலில் இறக்கி மீன் பிடிக்கிறார்.

The post நடுக்கடலில் மீன் பிடித்த கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagapattinam ,District ,Janitam Varghese ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கு...